
சமநிலைச் சமூகம் · சமூக நீதி · தமிழ் தேசியம்
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமநிலைச் சமூகத்தைப் படைத்தல்.
சாதி, மதம், நிறம், இனம், மொழி, பாலினம் மற்றும் பொருளாதார அடிப்படையில் பாகுபாடு காட்டாத கொள்கை.
"எனது மண் எனது ஆட்சி" எனும் கொள்கையின் கீழ், தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தி அரசியல் செய்தல்.
பெரியாரின் சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகள், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி, பகுத்தறிவுச் சிந்தனைகளை வலியுறுத்துதல்.
பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்றோரை கொள்கைத் தலைவர்களாகப் ஏற்பது.
வறுமை, வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழித்து, அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்தல்.
மதம் மற்றும் சாதியப் பிரிவினையை எதிர்த்து, சம உரிமை மற்றும் நல்லாட்சி வழங்குதல்.